நிறுவன நிதி நிலைமைக்கு ஒருநாள் வேலை அமைச்சு அனுமதி

கோப்புப்படம்

கோலாலம்பூர்  , மார்ச்  30-

நிறுவனங்கள்  நிதி நிலைமை குறித்து மீளாய்வுப்பணிகள் மேற்கொள்வதற்கும்  சம்பளம்  போன்றவைகளுக்கு ஏதுவாக  ஒருநாள் வேலைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

மக்கள்  நடமாட்டக்  கட்டுப்பாட்டை அனுசரிக்கும்  பொருட்டு இருவர்  மட்டுமே நிதி நிலைமையை அனுசரிக்க முடியும் என்ற மனித வள அமைச்சின்  உத்தரவு பின்பற்றப்படும்.

தொழிலாளர்களின்  ஊதியம், அதன்  தொடர்பானவற்றை நிறைவு செய்யும்  நடவடிக்கையாக இந்த ஒருநாள்  வேலை அமையும்.

மார்ச்  31 அல்லது ஏப்ரல் முதல்நாள்  ஒருநாளாக  அமையும் இந்நாளில்  மட்டுமே பணிசெய்யமுடியும் என்பதால்  பணியாளர்கள்  உரிய ஆதாரத்தைக் கொண்டிருக்கவேண்டும். அதோடு நிறுவன உயர்  அதிகாரி அல்லது முதலாளியின் தொடர்பு எண்  கொண்டிருக்க  வேண்டும்.

ஆதாரத்தைக் காட்ட வேண்டியிருந்தால் இக்கடிதம்  இடையூறு இல்லாமல்  பணியைத்தொடர உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here