மலேசியர்களைக் கொண்டுவர மாஸ் அனைத்துலக விமானம்!

பெட்டலிங்  ஜெயா, மார்ச்  30-

உலகின்  பல பாகங்களிலிருந்து  ஊர்திரும்ப முடியாத மலேசிய மக்களைத் திரும்ப அழைத்துவர மாஸ்  விமானங்கள்  பயன்  படுத்தப்படலாம்  என்று தெரிய வருகிறது. இதில்  அனைதுலகப்  பயண நிறுவனங்களுக்கான  விமானங்கள்  பயன்படலாம்  எனவும்  நம்பப்படுகிறது.

வெளிநாட்டில்  இருக்கும்  மலேசியர்கள்  அந்தந்த நாட்டின்  தூதரகதை அணுகுமாறும்  கோரப்பட்டிருக்கின்றனர்.

மலேசிய தேசிய விமானமாக மாஸ்  இருப்பதால் அதன்  கட்டமைப்பில் சாத்தியமாக இது அமைகிறது. இதன்  செயல்முறையின்  வழி வெளி நாட்டிலிருப்பவர்ககளை மிக நெருக்கமாக மலேசியர்களைக்  கொண்டுவரும்  வாய்ப்பு இருக்கிறது.

உள்நாட்டிலும்  இது சாத்தியமானதுதான் என்பதையும்  மறுப்பதற்கில்லை.

மலேசிய விமான  நிலையக் கட்டுப்பாட்டில்  இருக்கும் விமானங்கள் இதுபோன்ற போக்குவரத்துகளுக்குப்  பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

கோத்தா கினபாலு,  ஷாங்காய்  குவோங்  சோங்  ஆகிய இடங்களுக்கு மருத்துவ உபகரணங்கள்  கொண்டு செல்லவும்  முடிந்திருக்கின்றன.

சிறு ரக விமானங்கள்  உள்நாட்டுத் தேவைகளுக்குப்  பயன்படுத்தப்பட்டும்  வருகின்றன என்று மலேசிய விமான கட்டுப்பாட்டு நிலையத்தின்  கேப்டன்  இஷாம்  தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here