ஈப்போ:
மக்கள் கட்டுப்பாட்டு உத்தரவு (MCO)) காலம் முடிந்த பின்னரே மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமிப்பது நடைபெறும் என்று பேராக் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஹ்மத் பைசல் அஸுமு இன்று தெரிவித்தார்.
இருப்பினும், அந்தந்த துறைத் தலைவர்களால் நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மாநில அரசு முழுமையாக செயல்படுகிறது என்று அஹ்மத் பைசல் வலியுறுத்தினார்.
கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதை எதிர்த்துப் போராடுவதே இப்போது முன்னுரிமை என்று அவர் கூறினார். பேராக் மாநில அரசாங்கம் தற்பொழுது செயல்படவில்லை என்று சிலர் அனுமானங்களை உருவாக்கி வருகின்றனர்.
“இருப்பினும், மாநில செயலகம் மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் நெருக்கமான ஒத்துழைப்புடன், மாநில நிர்வாக நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சட்டத்தின் படி மாநில நிர்வாக கவுன்சிலர்களை நியமிக்க கால அவகாசம் இல்லை என்றும் அஹ்மத் பைசல் சுட்டிக்காட்டினார்.
“இருப்பினும், MCO அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்ட பின்னர் நியமனங்கள் நிச்சயமாக நடைபெறும். கோவிட் -19 தாக்கத்தை நாம் முதலில் சமாளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மார்ச் 13 ம் தேதி அஹ்மத் பைசலை மந்திரி பெசாராக நியமித்ததைத் தொடர்ந்து, அம்னோ, பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா மற்றும் பாஸ் ஆகியவற்றைக் கொண்ட பெரிகாத்தான் தேசிய கூட்டணி இன்னும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை இன்னும் நியமிக்கவில்லை.