மனிதன் மாறிவிட்டான்

மனிதன் மாறிவிட்டான்

கோலாலம்பூர், மார்ச் 31

நாளைமுதல் ஒருநாளின் நேரம் 12 மணியாக்கப் பட்டிருக்கிறது என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். பிரபஞ்சம் மாறவில்லை. சூரிய உதயம் மாறவில்லை. வளர்பிறையும் மாறவில்லை. கோள்கள் அதன் வழியில் பயணிக்கின்றன.  24 மணிநேரம் இன்னும் நடப்பில்தான் இருக்கிறது.

காலம் கருதி நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டியிருப்பதால் நேர மாற்றத்திற்கும் நாம் தயாராகிவிடவேண்டும்.

இது கட்டாயம் என்று அர்த்தப் படுதிக்கொள்வதைவிட அன்பான வேண்டுகோள் என்று எடுத்துக்கொண்டால் அனைத்து மக்களுக்கும் சாதகமாகவும் பாதகமில்லாமலும் இருக்கும்.

இக்கட்டான காலத்தில் இருக்கிறோம் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிகிறது. இந்த இக்கட்டான காலத்தைக் கடத்துவது என்பதுதான் கடினமாக இருக்கிறது. காரணம் என்ன?

ஆபத்து கண்முன்னே நிற்கிறது. அருகே போகவேண்டாம் என்ற அறிவுரை தேவையில்லை என்பது அடாவடித்தனம். இளைஞர்கள் எதையும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் பொதுமக்களும் பொருட்படுத்தவில்லை என்பதுதான் வருத்தம்.

விட்டில் இருங்கள் கோரோனா 19 நெருங்காது என்பது அறிவுரை கலந்த சுகாதாரம். இதைப் பின்பற்றியிருந்தால் பேராபத்து குறைந்திருக்கும். ஆனாலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இது எப்படி நதக்கிறது?

நன்மைக்காகப் பிறப்பிக்கப்படும் ஆணையை மதிப்பதில்லை.அதனால்தான் விபரீதங்கள் பெருகிக்கொண்டே போகின்றன. தடுக்கமுடியவில்லை. அதற்கு ஒரே வழி நேரத்தைக் குறைப்பதுதான். இது சாத்தியமா?

ஏன்முடியாது? வணிக நேரத்தை குறைப்பது, நடமாட்டத்தைக் குறைப்பது, வணிகத்தளங்கள் திறந்திருக்கும் நேரத்தை குறைப்பது, வாகனங்கள் பயணிக்கும் நேரத்தைக் குறைப்பது என்று அனைத்திலும் கை வைத்தால் நேரம் தானாகவே குறைந்துவிடும்.

வீட்டில் இருக்கும் நேரம் அதிகாமாகிவிடும். வீட்டு வேலைகள்  கிடப்பில் இருந்தால் அதைச்செய்யலாம். தூசு படிந்து கிடக்கும் பலவற்றை சுத்தம் செய்யலாம்.

வெளியில் இருக்கும் நேரம் குறைந்தால் கொரோனா தற்கொலை செய்துகொள்ளும். நாம் அதை நெருங்கினால் அது நம்மை அழித்துவிடும். நாம் தூரத்தில் இருந்தால் அது அழிந்துவிடும். இதில் எது சிறந்தது என்று தீர்மானிக்கவே நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது.

சுய கட்டுப்பாட்டிற்கு உரிய நேரம் இது. இதை மீறுவது நமக்கான துன்பம் அல்ல. மற்றவர்களையும் துன்பப்படுத்துகிறோம் என்று பொருள்.

கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here