கிள்ளானில் 2 பாலங்கள் மூடப்படுகின்றன

கிள்ளான் –

கிள்ளானிலுள்ள இரண்டு பாலங்கள் மூடப்படுகின்றன என்று தென் கிள்ளான் போலீஸ் தலைவர் ஏசிபி ஷம்சீல் அமார் ரம்லி நேற்றுக் கூறினார்.

கிள்ளானில் பொதுமக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவின் இரண்டாங்கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ராஜா மூடா நலா பாலமும் முஸாடின் பாலமும் இரண்டு திசைகளிலும் போக்குவரத்துக்கு மூடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பெர்சியாரான் கோத்தா, ஜாலான் பத்து 2ஆவது மைல், கெசாஸ் நெடுஞ்சாலையின் 24.2ஆவது கிலோ மீட்டர், ஜாலான் புக்கிட் ஜாத்தி சாலை சமிக்ஞை விளக்குச் சந்திப்பு, தெலுக் மினிகூன் பள்ளிக்கூட முன்புறமுள்ள ஜாலான் கம்போங் ஜாவா ஆகிய பகுதிகளில் சாலைத் தடுப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

தென் கிள்ளானில் வசிக்கும் வாகனமோட்டிகள் தேவைப்பட்டால் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தலாம் என அவர் ஆலோசனை கூறினார்.

தெலுக் பூலாய், கம்போங் டிலேக் சுங்கை ஊடாங், பண்டமாரான், போர்ட்கிள்ளான், கம்போங் சுங்கை சீரே ஆகிய பகுதிகளில் வசிப்போர் ஜாலான் கேம், ஜம்பாத்தான் ஜாலான் பாராங், ஜம்பாத்தான் கோட் ஆகிய சாலைகளைப் பயன்படுத்தலாம்.

ஸ்ரீ அண்டலாஸ், கம்போங் ஜாலா, தெலுக் மினிகூன், தாமான் செந்தோசா ஆகிய பகுதிகளில் வசிப்போர், ஜாலான் கோத்தாராஜா, ஜாலான் டத்தோ முகமட் சிடின், ஜாலான் புக்கிட் ராஜா, கொன்னோட் பாலம், கிள்ளான் – ஷா ஆலம் விரைவுச்சாலை, ஜாலான் பத்து 4 ஆகிய சாலைகளைப் பயன்படுத்தலாம்.

பண்டார் புக்கிட் திங்கி, கிள்ளான் ஜெயா, பண்டார் போட்டானிக் ஆகிய பகுதிகளில் வசிப்போர் பூலாவ் இண்டா நெடுஞ்சாலையையும் ஜாலான் பாராங், ஜம்பாத்தான் ஜாலான் பாராங், கெசாஸ் நெடுஞ்சாலை, ஜம்பாத்தான் கோத்தா ஆகிய சாலைகளையும் பயன்படுத்தலாம்.

பூலாவ் இண்டா சுற்றுப்பகுதியில் வசிப்போர் தென் கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையைப் பயன்படுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here