கொரோனா வார்டுக்காக தயாராகி வரும் ரயில்கள்

புதுடில்லி:

கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகம் உள்ளோர், தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தனிமைப்படுத்துவதற்காக, ரயில்களை தனிமை வார்டுகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு, கடந்த 14ம் தேதி முதல் அமலில் உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, இதனை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை மத்திய அரசு செய்துவருகிறது. இதன் ஒருபகுதியாக ரயில்களை தனிமை வார்டுகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

ரயில் பெட்டியில் உள்ள ஒவ்வொரு கேபினும், ஒருவரை உள்ளடக்கும் வகையில் தனி வார்டுகளாக மாற்றப்படுகிறது. ஒரு பெட்டியில் 9 கேபின்கள் உள்ளன. ஒரு பெட்டியில் இருக்கும் 4 கழிவறைகளில் ஒன்றை குளியலறையாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது.

‘நாடு முழுவதும், 20 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாராகி வருகின்றன. இவற்றின் மூலம், 3.2 லட்சம் படுக்கை வசதி ஏற்படுத்த முடியும்’ என, ரயில்வே கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here