கோவிட் 19 மட்டுமல்ல டிங்கியும் ஆபத்தானதே

பெட்டாலிங் ஜெயா:

கோவிட் -19 சம்பவங்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் இவ்வேளையில் நாட்டில் டிங்கு காய்ச்சல் சம்பவங்களும்  அதிகரித்து வருகின்றன.

இவ்வாண்டின் முதல் காலிறுதி ஆண்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 34,755 பதிவாகியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இது வரை  எடிஸ் கொசுவால் இதுவரை 49 பேர் மரணமடைந்திருக்கின்றனர். கடந்த 30 நாட்களில் சிலாங்கூரில் மாநிலத்தில் பெரும்பகுதிகள் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

உதாரணமாக மார்ச் 31ஆம் தேதி 102 டிங்கி சம்பவங்கள் பதிவாகியிருந்தால் அதில் 97 சம்பவங்கள் சிலாங்கூர் மாநிலத்திலும்  மீதமுள்ள 22 கோலாலம்பூரிலும் பதிவாகியிருக்கின்றன.

2018ஆம் ஆண்டு 80,615 டிங்கி சம்பவங்கள் பதிவாகி அதில் 147 பேர மரணமடைந்துள்ளனர். அதே போல் 2017ஆம் ஆண்டு 83,849 சம்பவங்களில் 117 பேர் மரணமடைந்துள்ளனர்.  கடந்த தசாப்தத்தில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் 2015ஆம் ஆண்டு  பதிவாகியுள்ளன. இதில் 120,835 சம்பவங்கள்  மற்றும் 336 பேர் மரணடைந்துள்ளனர்.

“டிங்குவுக்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லை, ஆனால் ஏடிஸ் கொசுவை அகற்றுவது அல்லது அதன் இனப்பெருக்கம் செய்யும் இடத்திலிருந்து அதனை ஒழிக்க முடியும் என்று பொது சுகாதார மலேசியா (பி.எச்.எம்) தனது  முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கொசுக்களின் பொதுவான இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் குழாய்களுக்கு இருக்கும் தண்ணீர் தொட்டி (சிஸ்டர்ன் டாங்கிகள்),  நீச்சல் குளங்கள், மீன்வளங்கள் மற்றும் வெற்றுக் கொள்கலன்கள் (நீர் சேகரிக்கக்கூடிய இடம்) ஆகியவை அடங்கும்.

கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் வெற்று வளாகங்களும் கொசுக்களுக்கான இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருப்பதாகவும், அத்தகைய இடங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடும். டிங்கு ஏற்படுவதற்கு காரணமான வைரஸை டிங்கு வைரஸ் (DENV) என்று அழைக்கப்படுகிறது, மேலும் நான்கு DENV செரோடைப்கள் உள்ளன. இதன் வழி  நான்கு முறை நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here