சட்டம் என்பது ஒழுங்கு படுத்துவதற்கான கருவி. அதைப் பயன்படுத்த முனையும் போது இடையூறுகள் செய்வது முற்றிலும் தவறு என்பதை அறிந்திருந்தும் அதே தவற்றைச் செய்வது பெருங்குற்றமாகும்.
பினாங்கு மாநிலத்தில் இதுபோன்ற மீறல்கள் நிகழ்ந்ததில் 33 குடும்பங்கள் நடுத்தெருவில் காத்துக்கிடக்கும் அவலம் நேர்ந்திருக்கிறது.
கொளுத்தும் வெய்யிலில் குழந்தைகளுடன் காத்திருக்கும் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டதாக பலர் கூறுகின்றனர்.
வெளியில் உடற்பயிற்சி செய்கின்றவர்களையும் கைது செய்துவிடுவதாகப் புகார்கள் வருகின்றன.
முதலில் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டம் புரிகிறாதா என்பதில் பலருக்கு இன்னும் குழப்பம் இருக்கிறது. புரிந்திந்ருதால் 33 குடும்பங்கள் நீதிமன்ற வாசலில் காத்திருக்க வேண்டியதில்லை.
புரிகிறது, ஆனால் புரியவில்லை என்பதாகத்தான் பலரின் பதில்கள் இருக்கின்றன. சிலர் இதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதாக இல்லை. இது அலட்சியம். இந்த அலட்சியமே நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கிறது என்றும் கூறுகின்றனர்.
இதற்குக் கூறும் காரணங்களுக்கான அபராதம் ஆயிரம் வெள்ளி என்பது இந்த நேரத்தில் குடும்பத்திற்கு ஆரோக்கியமானதல்ல?
குடும்பம் தெருவில் காத்திருக்கச் செய்யுமுன் யோசித்திருந்தால் தண்டனையும் இருதிருக்காது. அபராதம் ஏற்பட்டிருக்காது. குடும்பங்கள் நீதிமன்றத்தெருவில் அமர்ந்திருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.