கொரோனா தந்த குடும்பம்! தீமையிலும் ஒரு நன்மை

கோலாலம்பூர், ஏப்ரல் 2-

கொரோனா என்பது ஆபத்தான தொற்று என் அலறிக்கொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் சின்னதாய் நன்மைகளையும் விட்டுச் செல்கிறது என்பது எதிர்வினை.
கூடிய மட்டும் அதைத் தொடாமல் இருந்தால் நல்லது என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள ஏதுவாய் தலைநகர் சுதந்திர மைந்தர்களை ஓரிடத்தில் குவித்திருப்பது மகத்தான காரியமாகப் போற்றப்படுகிறது.

சுதந்திரப் பறவைகளைகளை ஒரே இடத்தில் ஐக்கியப் படுத்துவது சாதாரண காரியமல்ல. இதற்காக 100 க்கும் அதிகமான மாநகர் மன்றப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டு சுதந்திரப் பறவைகள் ஒன்றிணைக்கப்படிருக்கின்றனர்.

போலீஸ்துறை, செஞ்சிலுவைச் சங்கம். சமூகநலப்பிரிவு ஆகியோர் உதவியுடன் சுமார் 500 க்கும் அதிகமான சுதந்திரப் பறவைகள் தங்கள் குடும்பத்தோடு ஓரிடத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களைச் சுற்றி வளைப்பதற்கு 14 இடங்கள் அடையாளம் காணப்பட்டன என்று மாநகர மேயர் டத்தோ நூர் இஸாம் அஹ்மட் டஹ்லான் தெரிவித்திருக்கிறார்.
கோத்தா ராயா தொடங்கி நகரின் முக்கிய இடங்களில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்கள் சிலரும் இருக்கின்றனர்.

இவர்கள் உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள். இவர்களில் நோயாளிகளும் இருக்கின்றனர்.

சில முக்கிய மண்டபங்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . இவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மூன்றுவேளை உணவும் வழங்கபடுகின்றன. இவர்களிடமிருந்து கொரோனா 19 ஒதுங்கியே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here