மீன் பற்றாக்குறை இருக்காது

கோப்பு படம்

கோலாலம்பூர், ஏப்ரல் 2-

ஊரடங்கு காலத்தில் மீன் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என மலேசியர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என மலேசிய மீன் வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடல் பகுதியில் போதுமான மீன்கள் உள்ளன.

மலாக்கா நீரிணைப் பகுதியிலும் அதிகமான மீன்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன.

மீன் பங்கீட்டு முறையானது எப்போதும் போலவே இயல்பு நிலையில் செயல்பட்டு வருகிறது.

நாடு முழுக்க உள்ள மீன் விற்பனை சந்தைகள் தொய்வின்றி செயல்பட்டு வருகின்றன.

ஊரடங்கு காலத்தின் போதும் ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பின்னரும் மீன் சந்தைகள் வழக்கம்போல செயல்பட்டு வரும் என்பதால் மீன் விற்பனையில் பற்றாக்குறை ஏற்பட்டு விடுமோ என மலேசியர்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என மீன் வளத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here