நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “இந்த சூழலில் மிகவும் பயமுறுத்தும் விஷயம் என்னவென்றால் சிலர் கொரோனா வைரஸை ஒரு சமூகப்பிரச்சினையாக மாற்றுகிறார்கள். இந்த வைரசுக்கு மதம் இல்லை, அது மதங்களைப் பார்ப்பதில்லை, கடவுளைக்கண்டும் அஞ்சுவதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக்கொண்டு வீட்டில் இருக்கவும்.
எல்லா மதக்கூட்டங்களும், இந்தக் காலகட்டத்தில் மனிதன் உருவாக்கிய பேரழிவுகள். மீண்டும் சொல்கிறேன், கொரோனா வைரசுக்கு மதம் கிடையாது. அது ஜமாத்தோ, உ.பி.யோ, கேரளாவோ எதுவாக இருக்கட்டும், எல்லாமே தவறுதான். இது போன்ற ஆபத்தான கட்டத்தில் கூட மதத்தைத் தாண்டி சிந்திக்காதது மக்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.” இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.