வெளியே சுற்றி திரிந்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்

சென்னை,ஏப்ரல் 3-

சென்னை வேளச்சேரியில் வெளி மாநிலத்தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது;-

வெளி மாநில தொழிலாளர்களுக்குத் தேவையான வசதி செய்து தரப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கத்தை பற்றி தெரியாமல் மக்கள் வெளியே சுற்றுகின்றனர்.

கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் முழு ஒத்துழைப்பை அரசுக்குக் கொடுக்க வேண்டும்.

மக்களைத் துன்புறுத்த 144 தடை உத்தரவு போடவில்லை. மக்களைப் பாதுகாக்கவே போடப்பட்டுள்ளது ஊரடங்கு உத்தரவைப் பொதுமக்கள் கடைபிடிக்காவிட்டல் சட்டம் தன் கடைமையை செய்யும்.

அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதற்குத் தடை இல்லை. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவைகளை செய்து கொடுப்பது அரசின் கடமை, ஆனால் மக்களின் பாதுகாப்பு முக்கியம்.

தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படமாட்டாது. குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் வழங்கும் போதே நிவாரணத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஏப்ரல் மாத இலவச ரேஷன் பொருட்களை இந்த மாத இறுதி வரை வாங்கிக்கொள்ளலாம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here