கொரோனா தடுப்பூசி 7 இறுதி வடிவம்; 2 பலனளிக்கும் – பில்கேட்ஸ்

வாஷிங்டன்,ஏப்ரல் 5- 

சீனாவில் தொடங்கிய கொரோனா ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா என உலகின் 190க்கும் மேற்ப்ட்ட நாடுகளில் பரவி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகின் பல விஞ்ஞானிகள் குழு தனித்தும் சமூகமாகவும் அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக தற்போதைய நிலை குறித்து விளக்கியுள்ளார் உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ்

பில்கேட்ஸ் கூறி உள்ளதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பில் அனைத்து முயற்சிகளும் வேகமடைந்து வருகிறது.அதில் மிகவும் பலனளிக்கக்கூடிய 7 மருந்துகளை தேர்வு செய்து அதற்காக கோடிகணக்கான பணம் செலவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த 7 மருந்துகளும் தயாரிப்பதற்கான முழு முயற்சிகளும் தற்போது வேகமெடுத்துள்ளது. அதில் ஒன்று அல்லது இரண்டு கண்டிப்பாக உலக மக்களுக்கு பலனளிக்கும்.

இதுபோன்ற விவகாரங்களுக்கு அரசாங்கத்திற்கு பணம் திரட்ட முடியும், ஆனால் அதை எவ்வாறு கொண்டு செல்வது, இயக்குவது போன்றவற்றில் அரசாங்கங்கள் தடுமாறும்

தற்போதைய சூழலில் இறுதி வடிவம் பெறப்போகும் 7 தடுப்பூசிகளில் 2 மட்டுமே பலனளிக்கும் என்றாலும், தாங்கள் அந்த ஏழுக்கும் நிதி அளிக்க உள்ளோம். இதனால் பல கோடிகள் வீணாகலாம், இருப்பினும் இறுதி வடிவம் பெறும் தடுப்பூசி ஒன்றை கண்டறிவதற்கு அது பயன்படும்.

கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சிக்காக பில் கேட்ஸ் அறக்கட்டளையானது இதுவரை 100 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here