சிகையலங்கார நிலையங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் – ஏகே செல்வன் கோரிக்கை

கோலாலம்பூர்: உலகளாவிய நிலையில் கோவிட் -19 தாக்கத்தினால் நம் நாட்டில் கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் மக்கள் நடமாட்ட தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது.

14 நாட்கள் தடை உத்தரவு என்று நினைத்திருந்த வேளையில் அத்தடை மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டதால் தற்பொழுது எங்களை போன்றவர்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறோம் என்று என்று மலேசிய சிகையலங்கார உரிமையாளர்கள் சங்கத்தின் (Malaysia Hair Salon Owners Association) தலைவர் ஏகே செல்வம் தெரிவித்தார்.

மேலும் சிகையலங்காரம் செய்து கொள்ள கட்டாயத்தில் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு சிலையங்காரம் செய்வதோடு நாங்கள் எதிர்நோக்கும் வாடகை, தொழிலாளர்கள் தங்குமிடம், ஊதியம் ஆகியவற்றை கருத்திக் கொண்டு அரசாங்கம் நாங்கள் சிகையலங்கார கடைகளை நடத்த குறிப்பிட்ட நேரத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கடைக்கு வரும் ஒவ்வொரு  வாடிக்கையாளர்கள் முககவசம், கையுறை மற்றும்  கை சுத்திகரிப்பான் (hand sanitizer) ஆகியவற்றை வழங்க தயாராக இருக்கிறோம் என்று ஏகே செல்வம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here