பெட்டாலிங் ஜெயா,ஏப்ரல் 5-
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்கள் (எம்.சி.ஓ) சிறையில் அடைக்கப்படக்கூடாது என்று இஸ்கந்தார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரரான லிம் கிட் சியாங் கூறினார்.
சிறைச்சாலை தலைமை இயக்குநர் சுல்கிஃப்லி ஒமார் முன்மொழிவுக்கு ஆதரவாக அவர் இவ்வாறு தம் கருத்தை வழிமொழிந்தார்., மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டை மீறுகின்றவர்ளைச் சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக நீதிமன்றம் காவலற்ற தண்டனைகளை ஏற்க வகை செய்யலாம், இப்படிச்செய்வதால் சிறைச்சாலை நெரிசலை குறைக்கமுடியும். நாட்டின் சிறைச்சாலைகள் பெருமளவில் நிரம்பி வழிகின்றன,. அதனால், இது சாத்தியமில்லை” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இப்படிச் செய்வது சிறை ஊழியர்களுக்கு இது இடையூறாக அமையக்கூடும்.
இந்தோனேசியா, இந்தியா , மேற்கத்திய நாடுகளின் கைதிகளைப்போன்று கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை அளிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார், சிறையில் அடைப்பதால் சிறைச்சாலைகளில் சுகாதார மற்றத்தன்மையை உருவாக்கிவிடும் என்ற அச்சமும் இதற்குக் காரணமாகும்.
வயதான கைதிகளை விரைவில் விடுவிக்க வழியமைந்தால் நெரிசல்.
சுகாதாரம் ஆகியவற்றுக்கு தீர்வாக அமையும் என்றார் அவர்.