பெருமை பேசியதால் வந்த வினை

பெருமை பேசியதால் வந்த வினை

கோலாலம்பூர், ஏப்ரல் 5-

மக்கள் நட மாட்டக் கட்டுப்பாடு நெருக்கடியின் போது ஒரு பெண் தனது இன்ஸ்ட்ராகிராம் கணக்கின் வழியாக தற்பெருமை காட்டிதால் குடிநுழழைவுத்துறை மீது தவறான பார்வை விழுந்திருப்பதாகப் பேசப்படுகிறது.

சபாவின் தவாவ, கோலாலம்பூர் பயணத்திர்குப் பச்சை விளக்கு கிடைத்ததாக பெருமை பேசியிருக்கிறார் அவர்.

அவர் தனது இடுகையில், குடிநுழைவுத்தலைவர் தனது அப்பாவின் நண்பர் என்று பதிவிட்டிருக்கிறார், இது தனது தொடர்பைப் பயன்படுத்தி கோலாலம்பூருக்கான விமானத்தைப் பிடிக்க அனுமதித்ததாக தப்பான தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டிற்கு கீழ்ப்படியாததால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நெட்டிசன்கள் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.

அப்பெண்மணி தனது முகநூல் கணக்கில் சபா குடிநுழைவுத் துறையிடம் தவறான புரிதலை ஏற்படுத்தி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கோரியதாகவும், மக்கள் நடமாட்டக் கட்டுபாட்டிற்கு இணங்காத அவரது பொறுப்பற்ற நடத்தைக்காக அல்ல என்றும் கூறப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here