இ-கற்றல் முறை இலகுவாக்குகிறது

இ-கற்றல் முறை இலகுவாக்குகிறது

ஜோகூர் பாரு, ஏப்ரல் 5-

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காலக்கட்டத்தில் (எம்.சி.ஓ) மாநிலத்தில் உள்ள மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர ஜொகூர் கல்வித் துறை இ-கற்றல் முயற்சிகளை கையாள்கிறது.

கூகிள் வழியும் வாட்ஸ்அப், டெலிகிராம், யூடியூப் , ஜூம் போன்ற பிற சமூக ஊடக பயன்பாடுகளின் மூலம் பல்வேறு கற்றல்களை கையாண்டு வருவதாக மாநில சுகாதார, சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர்.வித்யானந்தன் தெரிவித்தார்.

ஆர்.டி.எம் ஜோகூருடன் இணைந்து தினமும் மதியம் 12.30 மணி முதல் நடத்தப்படும் ஜொகூர் எஃப்.எம் வானொலி போன்ற ஒளிபரப்பு ஊடகங்களைப் பயன்படுத்தி , கல்வி அமைச்சினால் நடத்தப்படும் தொலைக்காட்சி கல்வி மூலம் கற்றல், அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இம்முறை ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, ஜோகூரில் 1,187 தொடக்க , இடைநிலைப் பள்ளிகள் மூடப்பட்டன, மேலும் 580,000 மாணவர்கள் , 59,000 ஆசிரியர்கள் ,உதவி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த மூடலில் 71 தனியார் பள்ளிகள், 1,473 தனியார் குழந்தை பராமரிப்பு மையங்களைப் பாதித்தன., இதில் 90,000 மாணவர்கள், ஆசிரியர்கள் ஊழியர்கலும் அடங்குவர்.

இதற்கிடையில், வீடற்றவர்களுக்கு மாநில அரசு கூலாய் அருகிலுள்ள கேம் வாவாசன் பினா நெகரா குனோங் பூலாய் என்ற இடத்தில் தற்காலிகத் தங்குமிடம் அமைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here