கொரோனா பாதிப்பு அதிகம் என்றால் வெளியில் செல்வீர்களா?

கோலாலம்பூர், ஏப்ரல் 6-

கொரரோனா 19 தொற்றுக் கிருமிகள் கோலாலம்பூர் மாநகர ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் போது யாரேனும் வெளியில் வருவார்களா? என்ற விளம்பரப் படம் ஒன்றை சுகாதாத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தமது ட்விட்டர் ,முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார்.

இப்பதிவு நெட்டிசன்களிடமிருந்து அதிக பாராட்டுகளைப் பெற்று வருவதாகப் பகிரப்படுகிறது. டாக்டர் நூர் ஹிஷாம் படத்தின் மூலம் வெளியிட்டுள்ள கேள்விக்கு படத்தலைப்பை முன்வைத்தார்.

அந்தத் தலைப்பில் கோவிட் -19 தொற்று அதன் உண்மையான வடிவம் அகியவற்றை இணைத்திருந்தார். அதோடு அவர், இதுபோல் பரவுகிறது என்றால், வீட்டை விட்டு வெளியேறுவீர்களா? என்ற ஒரு கேள்வியையும் முன் வைத்திருந்தார்.

ஒரு புத்திசாலித்தனமான முடிவு என்பது , வீட்டிலேயே இருப்பதுதான் என்று பதிவிடப்பட்ட மூன்று மணி நேரத்தில் 25,500 முறை பகிரப்பட்டிருக்கிறது இத்தகவல்.

கோவிட் -19 கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய தொற்று. வெளியே செல்லத் துணியவே மாட்டேன், அதே நேரத்தில் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டினை நீட்டிக்கவும் கூடாது என்பதாகவும் உறுதியெடுத்துக்கொண்டால் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதைச் சபதமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here