1000 கோடி வெள்ளிக்கான உதவித் தொகை அறிவித்தார் – முஹிடின்

பெட்டாலிங் ஜெயா: கோவிட் -19  மக்கள் நடமாட்ட  கட்டுப்பாட்டு தடை (MCO) தாக்கத்தை  குறைக்கும் முயற்சியில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) இலக்காகக் கொண்ட 1000 கோடி வெள்ளி  மதிப்புள்ள சிறப்பு உதவித் தொகை தொகுப்பினை  பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் வெளியிட்டார்.

பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பணப்புழக்கத்தை அதிகரிக்க மக்களுக்கு இது  பொருளாதார ஊக்கத்தை வழங்க முடியும்.வர்த்தகத்தில் குறிப்பாக SME களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு அமைச்சரவைக் குழு ஒன்று கூடிய இரண்டு அவசரக் கூட்டங்களின் முடிவு இதுவாகும்.

முஹிடின் கடந்த மார்ச் 27ஆம் தேதி பொருளாதார மீட்சிக்காக 250 கோடி வெள்ளிக்கான உதவித் திட்டங்களை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கோவிட் – 19 தாக்கத்தை தொடர்ந்து அரசாங்கம் மக்கள் நடமாட்ட தடை உத்தரவை மார்ச் 18ஆம் தேதி அமலுக்கு கொண்டு வந்ததற்கு பிறகு இந்த உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. MCO மார்ச் 31 அன்று முடிவடையவிருந்தது, ஆனால் அரசாங்கம் அதை ஏப்ரல் 14 வரை நீட்டித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here