அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,000 பேர் பலி!

அமெரிக்காவில் பலியானவர்கள்
வாஷிங்டன்,ஏப்ரல் 8-

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் போராடிக்கொண்டு இருக்கின்றன.

வல்லரசு நாடான அமெரிக்கா, கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.  உலக அளவில் அமெரிக்கா  தான், கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,837 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பலியாகியுள்ளனர்.

அதேபோல், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here