வீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..!

ஆன்மிக தகவல்கள் – நம் வாழ்வில் செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். எனவே நம் வீட்டில் என்றும் செல்வம் செழிக்க லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் ஜபித்து வர அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இந்த மந்திரத்தை மல்லிகை பூ போடும் போது கூறலாம்.

அதேபோல் நம் வீடு லக்ஷ்மி கடாக்ஷத்துடன் இருக்க வேண்டும் என்றால் மல்லிகை பூவை சுவாமி படத்திற்கும், கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும்.

மல்லிகை லட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பூ. அதேபோல் பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.

 லட்சுமி காயத்ரி மந்திரம்:

ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
ஸ்வஹ் காலகம் தீமஹி
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள். இந்த மந்திரத்தை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் ஜபிப்பது மேலும் சிறப்பாகும்.

மந்திரத்தை ஜெபிக்கும் முன்பு வீட்டில் விளக்கேற்றி பிள்ளையாரையும் லட்சுமி தேவியையும் நன்கு வணங்கிவிட்டு ஜபிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here