கூடல் இடைவெளி கட்டுப்பாடு நீட்டிக்கப்பட வேண்டுமா?

கூடல் இடைவெளி வேண்டுமா?

கோலாலம்பூர், ஏப்.9-

மக்கள் நடமாட்டக் கூடல் இடைவெளி நீட்டிக்கப்படவேண்டும். முதல் கட்டம் முடிந்து இரண்டாம் கட்டம் முடிவடையும் நேரத்தில் இருக்கிறது. இருந்தும் முன்னேற்றம் தெரியவில்லை என்கிறார் மூன்றாம் உலகப்போர் குறித்த தலைமை ஆய்வாளர் டாக்டர் லிம் சி ஹான்.

ஒருநாளில் 50 பேருக்கும் குறைவாக இருந்தால், கூடல் இடைவெளி நடமாட்டக் கட்டுப்பட்டைத் தளர்த்த யோசிக்கலாம். ஆனால், நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது.

இரண்டாம் கட்ட நீட்டிப்பிலும் எந்த மாற்றங்களும் நிகழவில்லை. என்பதனால் இன்னும் இரண்டு வாரங்கள் மக்கள் கூடல் இடைவெளி காலத்தை நீட்டிப்பதே நல்லது என்கிறார் டாக்டர் லிம்.

இன்னும் இருவாரங்கள் காலத்தை நீட்டிப்பதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொரோனா -19 நடவடிக்கைகளில் முன்னேற்றம் தெரியவில்லை.

ஆதலால் கால நீட்டிப்பு என்பது அவசியமாகிறது என்கிறார் முன்னாள் மருத்துவத்துறை தலைமை இயக்குநர் டான்ஶ்ரீ டாக்டர் இஸ்மாயில் மரைக்கான்.

குறைந்த ஆதாரங்களில், அக்கறையில்லா நடவடிக்கைகளினால் நன்மை தெரியவில்லை. மக்களுக்கு இன்னும் விளங்காத் தன்மையே நிலவுவது போலவே இருக்கிறது. அல்லது விளங்கியும் அலட்சியம் காட்டப்படுகிறதா? விளங்கிக்கொள்ள இயலவில்லை என்றால் அதற்கான வழிகள் ஆராயப்பட வேண்டும். மக்களுக்கு என்ன தேவை என்பதும் அறியப்படவேண்டும் என்றார் அவர்.

இன்னும் ஆறு வாராங்களாவது மக்கள் கூடல் இடைவெளி காலம் நீட்டிக்கப்படவேண்டுமென்கிறார் இமாரெட் என்ற மலேசிய இஸ்லாமிய மருத்துவ சங்கத்தின் ஆலோசகர் டத்தோ டாக்டர் முசா நோர்டின்.

கூடல் இடைவெளி கட்டுப்பாட்டை நீக்குவதற்குமுன் சிலவற்றைத் தெளிவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. குறிப்பாக மருத்துவமனைகள் கொரோனா பிரச்சினைகளைக் கையாளுகின்ற திறனைப் பெற்றிருக்க வேண்டும்.

இதைத்தான் சீனாவிலும் கடைப்பிடிதார்கள் ஆறு வாரங்கள் இறுக்கம் செய்ததால் நிலைமை கட்டுக்குள் வந்தது. அந்த வழியைத்தான் நாமும் பின்பற்றவேண்டும் என்கிறார் அவர்.

எந்த ஒரு மனிதர் மீதும் சந்தேககம் எழுமானால் சோதனை அவசியம் என்றாக இருக்கவேண்டும்.

அரசாங்கம், கூடல் இடைவெளி நடமாட்டக் கட்டுப்பாட்டில் கடுமையாக இருக்க வேண்டும். அடையாளம் காணப்பட்டவர்களைப் பின்தொடரவும் வேண்டும். இதற்கு ஜிபிஎஸ் கைப்பேசி உதவலாம்.

சிங்கப்பூர், தென்கொரியா தைவான் ஆகிய நாடுகளும் இதே முறையைக் கையாள்வதாக டாக்டர் முசா நோர்டின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here