கோலாலம்பூர்: மக்கள் நடமாட்டத் தடை உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்திலும் நாடு மக்களின் நன்மைக்காக கடமையில் ஈடுபட்டிருக்கும் முன்னிலை பணியாளர்களுக்கு பாதுகாப்பு அம்ச பொருட்களை வழங்கியதாக கெராக்கான் கட்சியின் தலைவர் டத்தோ டோமினிக் லாவ் தெரிவித்தார்.
கோவிட்-19 தாக்கத்தைத் தொடர்ந்து கெராக்கான் வழி நிதி திரட்டினோம். இது வரை 40 ஆயிரம் வெள்ளி நிதியுதவி கிடைத்திருக்கிறது. அந்நிதியைக் கொண்டு முதற்கட்டமாக காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றிக்கு முககவசம், கைசுத்திகரிப்பான் (hand sanitizer), குடிநீர், உணவு ஆகியவற்றை வழங்கினோம். அடுத்த கட்டமாக பத்திரிகையாளர்களுக்கு உதவிகளை வழங்கினோம் என்றார். மேலும் நாடளாவிய நிலையில் இருக்கும் உறுப்பினர்களுக்கும் முககவசம், கைசுத்திகரிப்பான் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.
கோவிட்- 19 தாக்கத்தை குறித்து நாம் தற்பொழுது கவலை கொண்டிருக்கிறோம். ஆனால் கோவிட்-19 தொற்று ஒரு முடிவுக்கு வந்தபின் இன்னும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். ஏனெனில் அலுவலகங்கள், கம்பெனிகளுக்கு செல்லும் பணியாளர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருக்கிறது. கோவிட்-19 தாக்கத்திற்கு பின்பு ஏற்படும் விளைவுகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து நாம் மிகவும் சிந்திக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என்று டத்தோ டோமினிக் லாவ் கூறினார்.
மேலும் கெராக்கான் சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் இரண்டு மெஷன்கள் கூட்டரசு பிரதேச தீயணைப்பு படையினருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.