ஜோகூர் பாரு, எப்ரல் 9-
வருமானம் இழப்பு ஒருபக்கம், உயிர்ப்போராட்டம் ஒருபுறம் என்ற இக்கட்டான சூழலில் 12 ஆயிரம் தொழிலாளார்கள் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பியிருக்கின்றனர் என்று டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்திருகிக்கிறார்.
சிங்கப்பூரின் தொழிலாலாளர்களின் எண்ணிக்கைய்ல் 10 விழுக்காட்டினர் மலேசியர்களாக இருக்கின்றனர்.
இம்மாதம் முதல் நாளிலிருந்து 6 ஆம் நாள்வரை 12 ஆயிரம்பேர் நாடு திரும்பியிருக்கின்றனர் என்பது பெரிய எண்ணிக்கையாகும்.
இவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் அன்றாடம் எல்லை கடக்கும் கனரக ஓட்டுநர்கள், வணிக வாகனங்களின் ஓட்டுநர்களாவர்.
ஒரு நாளைக்கு 1,200 வாகனங்கள் சிங்கப்பூரைக் கடக்கின்றன என்றும் கணக்கிடப்பட்டிருக்கின்றன. சிங்கப்பூரில் 40 ஆயிரம் மலேசியர்கள் வேலை பார்க்கின்றனர்.
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டில் அங்கிருந்து வெளியேறுகின்றவர்கள் கட்டாயம் கொரோனா சோதனையை மேற்கொள்ளும் பொருட்டு 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படவேண்டியிருக்கும்.
தனிமைப்படுத்துதல் என்பது வீட்டிலும் இருக்கலாம் அல்லது அதற்கான மையத்திலும் அமையலாம். இதை சுகாதாரத் துறையே முடிவு செய்யும்.
இரண்டாம் வழியில் திரும்பும்போது மலேசியர்கள், சிங்கப்பூரின் மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் .