கொரோனாவில் புதிய திருப்பம் பாதித்தவர் எண்ணிக்கையைக் கடந்தது குணமானவர்களின் எண்ணிக்கை

கொரோனாவில் புதிய திருப்பம்

கோலாலம்பூர், ஏப்.10-

இன்று நண்பகல் 12 மணி வரையிலான புள்ளி விவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் ஒரு நாளுக்கான எண்ணிக்கையைக் காட்டிலும் குணமடைந்திருப்போரின் எண்ணிக்கை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு நாள் மட்டும் பாதிக்கப்பட்டோர் 118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்படோரின் எண்ணிக்கை 222. பாதிப்பை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கொரோனா சவாலை மலேசியர்கள் வித்தியாசமாகக் கையாண்டு வெற்றி பெறுவார்கள் என்ற புதிய நம்பிக்கை இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.

இதுநாள் வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் மொத்த எண்ணிக்கை 4,346 ஆகும்.

குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,830 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here