பாசார் போரோங் செலாயாங் சாலை மூடப்பட்டது

செலாயாங் சாலை மூடப்பட்டது

கோலாலம்பூர், ஏப்.10-

பாசார் போரோங் செலாயாங் நோக்கிச் செல்லும் பிரதான சாலை கோம்பாக் மாவட்ட காவல் துறை அதிகாரிகளால் மூடப்பட்டது.

செலாயாங் வட்டாரத்தின் மூன்று முக்கியமான சாலைகளும் மூடப்பட்டு விட்டதாக செலாயாங் காவல் துறை தலைவர் ஏ.சி அரிபாய் தராவே அறிவித்துள்ளார்.

மக்மோர் அபார்ட்மெண்ட் நோக்கிச் செல்லும் ஜாலான் செலாயாங் பாரு, ஜாலான் பெசார் கம்போங் செலாயாங் இண்டா, ஜாலான் பெசார் செலாயாங் பாரு ஆகிய சாலைகள் மூடப்பட்டு விட்டன.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இச்சாலைகள் மூடப்படுகின்றன. அருகில் உள்ள குடியிருப்புகளுக்குச் செல்வோர் மாற்றுச் சாலைகளை பயன்படுத்துமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here