மருத்துவர்கள், செவிலியர்களுக்காக சொகுசு ஓட்டலை வழங்கிய ஒஸ்தி நடிகர்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஓய்வெடுக்க நடிகர் சோனுசூட் தனது சொகுசு ஓட்டலை வழங்கி உள்ளார்.
கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்கள் பலர் உதவி வருகிறார்கள். இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளார்.
அவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் சோனுசூட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி ஓட்டலை வழங்க முன்வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் மக்கள் உயிரை காப்பாற்ற இரவும்-பகலும் உழைக்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வெடுக்க இடம் தேவை என்பதால் என்னால் இயன்ற உதவியாக இதை செய்துள்ளேன்” என்றார். சோனுசூட் தமிழில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here