அரசாங்கத்தின் அறிவிப்பு – ஆறுதல் அளிக்கிறது

கோலாலம்பூர்: எங்கள் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் முடிதிருத்தும் மற்றும் சிகையலங்கார கடைகளை திறக்க அனுமதி வழங்கியதற்கு நன்றி என்கிறார் மலேசியன் சிகையலங்கார உரிமையாளர் சங்கத்தின் Malaysian Hair Saloon Owner Association (MAHAS மகாஸ்) தலைவர் ஏ.கே.செல்வன்.

அரசாங்கம் சிகையலங்கார கடைகளை திறக்கலாம் என்ற அறிவிப்பு மனத்திற்கு ஆறுதல் அளிக்கிறது. ஆனால் முடி வெட்ட வரும் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் மிக அவசியம் என்பதனை ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதனை முதலில் சோதனை செய்ய வேண்டும். அடுத்ததாக முககவசம், கைசுத்தரிப்பான் மற்றும் கையுறைகளை வழங்க வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும முடி திருத்தம் செய்தபின் முககவசம், கையுறைகளை மாற்ற வேண்டும்.

அமெரிக்காவில் ஒரு சிகையலங்கார  உரிமையாளர்  கோவிட்-19 தொற்று காரணமாக மரணமடைந்தார்  என்ற  செய்தியை நாம்  அறிந்திருப்போம். அவர் சரியான  பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றாததால் மரணமடைந்திருக்கிறார். அவரின் மரணத்தை நாம் ஒரு படிப்பினையாக எடுத்து கொள்ள வேண்டும்.

அதே வேளை நாங்கள் கடைகளை திறப்பது பெரியளவில் வருமானம் ஈட்டுவதற்காக அல்ல. தினமும் ஊழியர்களுக்கு சம்பளம், கடை வாடகை, குடும்ப செலவு ஆகியவற்றை ஈடு செய்வதற்காக மட்டுமே என்று அவர் தெரிவித்தார்.

எங்களை போன்ற வாடகை கடை நடத்துபவர்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறோம். அரசாங்கம் 30 விழுக்காடு வாடகை தொகையை கடை உரிமையாளர்கள் குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால் பெரும்பாலான கடை உரிமையாளர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்பதே நிசர்தமான உண்மை.

அடுத்த லெவி கட்டணத்தில் 25 விழுக்காடு சலுகையை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.  இனி வரும் காலங்களில்  விசா நீட்டிப்பு செய்பவர்களுக்கு மட்டுமே லெவி கட்டண சலுகையை பெறமுடியும். ஆனால்  ஏற்கெனவே லெவி கட்டியிருந்தால் அதனை திரும்ப பெறமுடியாது.

அரசாங்கம் அறிவித்திருக்கும் அறிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் வளர்ந்து வருகிறது. அரசாங்கம் அறிவிக்கும் எந்த அறிக்கையாக இருந்தாலும் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்.

சிகையலங்கார தொழிலை நடத்தும் இந்தியர்கள் 70 விழுக்காடினர் பி40 பிரிவை சேர்ந்தவர்களாவர். எங்களின் நிலையையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஏ.கே.செல்வன் வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here