பிரான்ஸில் ஒரே நாளில் ஆயிரத்து 300 பேர் பலி!

பாரிஸ் –

உலகம் முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 515 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்கள் 48 ஆயிரத்து 953 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 262 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பினர். உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 95 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண் டவம் ஆடி வருகிறது. குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

அந்நாட்டில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 749 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 341 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பிரான்சில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 210ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here