ரிஷிகேஷ், ஏப்.12- இந்தியாவிற்கு சுற்றுலாவிற்கு வந்துள்ள வெளிநாட்டு மங்கையர் 144 தடையைப் பற்றி கவலை கொள்ளாமல் கங்கை ஆற்றின் கரைபகுதியில் குவிந்து வருகின்றனர்.
இவர்களை தடுத்து நிறுத்தும் காவல் துறை அதிகாரிகளிடம் இவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகளின் ஆலோசனையை செவிமடுக்காத 64 வெளிநாட்டு பெண்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.