துரிதகதிக்கு மாறும் பினாங்கு 40 சாலைகள் முடக்கம்

ஜோர்ஜ் டவுன், ஏப்.13-
பெனாந்தி மதராசாவை முன்வைத்து கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் துரிதகதியில் இயங்கத் தொடங்கி விட்டது பினாங்கு மாநிலம்.

பெனாந்தி இருப்பது பெருநிலத்தில் என்றாலும் இங்கிருந்து தீவுக்குச் செல்லும் வாகனங்கள் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளும் இறுகத் தொடங்கியுள்ளன.

21 சாலைகள் மூடப்பட்டு அவை 24,28,30 எனத் தொடர்ந்து இன்று முதல் 40 சாலைகள் தடுக்கப்பட்டு அங்கு காவல் துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவதாக மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ சஹாபுடின் அப்துல் மானான் அறிவித்துள்ளார்.

பெனாந்தி மதராசாவை மையமாகக் கொண்டு இங்கிருந்து நூற்றுக் கணக்கானோர் ஸ்ரீபெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற தப்லிக் ஜமா மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here