பிணம் எனக் கருதி, உயிருடன் எரிக்கப்பட்டார்! அமெரிக்காவில் அசம்பாவிதம்

நியூ யார்க்: கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவரின் சடலம் எனக் கருதி உயிருடன் ஒருவர் எரிக்கப்பட்ட அசம்பாவிதம் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

48 வயதான மைக்கல் ஜோன்ஸ் நியூ யார்க் நகரில் உள்ள மின்சுடலை ஒன்றில் பிணங்களை எரிக்கும் வேலை பார்த்து வந்தார்.

கொரோனா தொடர்பான மரண சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இவர் தொடர்ந்து பிணங்களை எரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

16 பிணங்களை 1800 டிகிரி பெரண்ஹைட்டில் வைத்து எரித்த இவர் அசதி காரணமாக குட்டித் தூக்கம் போட நினைத்தார்.

பிணங்கள் அடுக்கி வைக்கப்படும் வண்டி ஒன்றில் சாய்ந்த இவர் களைப்பு காரணமாக அசந்து, ஆழ்நிலை உறக்கத்திற்குச் சென்றிருக்கிறார்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஆடவர் ஒருவர் பிணங்களை எரிக்கும் வேலையைத் தொடர்ந்திருக்கிறார்.

பிண வண்டி மீது தூங்கிக் கொண்டிருந்ததால் பிணம் என்று கருதிய நிலையில் மைக்கலை மின்சுடலைக்குள் வைத்து விசையை அழுத்த அடுத்த 15 நிமிடத்தில் மைக்கல் பஸ்பமானார்!

இந்த விபரீத சம்பவத்தைத் தொடர்ந்து ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

மின்சுடலக்குள் வைக்கப்பட்டு விசையை அழுத்திய அடுத்த 15 நொடிகளுக்கு ‘வீல்’ என்ற அலறல் கேட்டிருக்கிறது.

அதன் பிறகு எல்லாமே அடங்கி விட்டது. மைக்கலைக் காப்பாற்ற இயலவில்லை என மின்சுடலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

‘கொரோனாவை விட கொடியவர்களும் இங்கு இருக்கிறார்களே’ என அமெரிக்கா முழுக்க இச்சம்பவம் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here