கோலாலம்பூர்,ஏப்.13- நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடத்தப்படும் ரமடான் சந்தைகளுக்கு அனுமதி கிடையாது என பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.
ரமடான் சந்தைகளுக்கு இப்போது அவசியம் கிடையாது.
புதிய கொரோனா குழுமம் உருவாகுவதை அரசாங்கம் விரும்பவில்லை.
இதனை கருத்தில் கொண்டே பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் ரமடான் சந்தைகளுக்கு தடை விதித்திருக்கிறார் என சப்ரி அறிவித்துள்ளார்.