பெட்டாலிங் ஜெயா, 15-
ஹரிராயா பண்டிகை காலத்தில் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு நடப்பில் இருந்தாலும் கோவிட் -19 தொற்று பரவாமல் இருக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
கூட்டங்களைக் கட்டுப்படுத்துவது, சொந்த மாநிலத்திற்குள் பயணத்தை கட்டுப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும் என்று முன்னாள் துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கூறினார்.
பண்டிகைக் காலங்களில் தொற்றின் தாக்கம் கடுமையாவதற்கும் வாய்ப்பு அதிகமிருக்கிறது என்று அவர் கூறினார்.
இன்னும் நிலையான, கூடுதலான வழிகாட்டுதல்களையும் விதிகளையும் விதிக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்கடினார்.
மாநிலங்களுக்கு இடையே மக்களுக்கான பயணத்தடை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கான அனுமதியில் ஒரே நேரத்தில் 10 பேருக்கு மேல் ஒரே இடத்தில் ஒன்றுகூடவும் அனுமதிக்கக்கூடாது.
ஹரி ராயாவுக்குப்பிறகும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டை நீட்டிக்க பல தரப்பினரின் பரிந்துரைகளுக்குp பதிலளிக்கும் வகையில் அவர் இக்கருத்தைக் கூறினார்.
சீன புத்தாண்டு காலத்தில் சீனாவின் வுஹானில் கையாளப்பட்ட நடவடிக்கைகளை கற்றுக்கொள்ளவது இவ்வேளையில் நன்மையாக இருக்கும் என்றார் அவர்.
மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் என். ஞானபாஸ்கரன் இது தொடர்பில் தம் கருத்தையும் தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு நடப்பில் கவனம் செலுத்துவதற்கும் தொற்று இருப்பதை உறுதி செய்வதற்கும் முன்னுரிமை வழங்கும் நடவடிக்கைகள் மிக் அவசியம் என்றார் அவர்.
ஹரிராயா காலத்திற்கு முன்னுள்ள இரு வாரங்களும் முக்கியமானவை என்றார் அவர்.