கைகளை கழுவ சானிடைசருக்கு பதில் ‘வோட்கா’வை பயன்படுத்த ஜப்பான் முடிவு

டோக்கியோ,ஏப்ரல் 16-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜப்பானிலும் தற்போது கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஒவ்வொரு கிருமி நாசினியிலும் 70 முதல் 80 சதவீத ‘ஆல்கஹால்’ பயன்படுத்தப்படுகிறது.

சில கிருமி நாசினியில் 40 சதவீத ‘ஆல்கஹால்’ பயன்படுத்தப்படுகிறது. எனவே கிருமி நாசினிக்கு பதிலாக ஆல்கஹாலையே நேரடியாக பயன்படுத்த ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி மதுபானங்களில் ஒருவகையான வோட்காவை கிருமிநாசினியாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமி நாசினியை விட நேரடியாக பயன்படுத்தப்படும் வோட்காவுக்கு வீரியம் அதிகம் என்று கூறப்படுகிறது.

எனவே வோட்காவை நேரடியாக பயன்படுத்துவதைவிட அதனை தண்ணீருடன் கலந்து கைகளை சுத்தம் செய்து பயன்படுத்த ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here