கோலாலம்பூர்,ஏப்.16- இவ்வாண்டுக்கான நோன்புப் பெருநாள் காலத்திய ‘பாலிக் கம்போங்’ எனப்படும் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வழக்கமான நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு இணை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமிய சமூகம் உட்பட அனைத்து சமூகமும் பாதுகாப்பு கருதி இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.