போதைப்பொருள் சந்தேகத்தில் மோட்டார் சைக்கிள் பட்டறை தகர்ப்பு

போதைப்பொருள் சந்தேகத்தில் மோட்டார் சைக்கிள் பட்டறை தகர்ப்பு

கிரியான், ஏப்.16-

கம்போங் பெர்மாத்தாங் கிரியான் பகுதியில்  போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மோட்டார் சைக்கிள் பட்டறை பயன்படுத்தப்பட்டிருக்கும் சந்தேகத்தில் இங்குள்ள கோலா சாங்லாங், வளாகத்தில் சோதனை நடத்திய காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் விநியோகிப்பாளர், வாடிக்கையாரைக் கைது செய்தனர்.

நேற்று மாலை 5.40 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில், 51 கிராம் படிகக் கட்டிகள் அடங்கிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், ஷாபு, 1,159 வெள்ளி என பட்டறையிலிருந்து பறிமுதல் செய்ததாக கங்கார் மாவட்ட துணை போலீஸ் தலைவர் டி.எஸ்.பி முகமட் அனுவர் ஜூசோ தெரிவித்தார்.

ஆரம்ப விசாரணையில், மோட்டார் சைக்கிள் பட்டறையை நடத்திவந்த மெக்கானிக் இப்பட்டறையை போதைப்பொருட்கள் பயன்பாட்டு இடமாகப் பயன்படுத்தி வந்திருப்பதாக அறியப்பட்டிருக்கிறது.

விசாரணை செய்யப்பட்ட பட்டறை மெக்கானிக் முன்பும் போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவைக் கொண்டிருந்ததாக முகமட் அனுவார் கூறினார்.

இந்த வழக்கு 1952 இன் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39 பி இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் சந்தேக நபர்கள் இருவரும் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here