மனைவியை கொன்றுவிட்டு குடியிருப்புக்கு நெருப்பு வைத்த ஆடவர்

சுவிட்சர்லாந்தில் கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை கொன்று விட்டு, சொந்த குடியிருப்புக்கு நெருப்பு வைத்த நபர் மீது போலீசார் தற்போது வழக்குப் பதிந்துள்ளனர். பெர்ன் மண்டலத்தில் Frutigen பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தில் போலீசார் தற்போது குற்றவியல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 56 வயது நபர், இதுவரை தமது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போது 41 வயதான தமது மனைவியை குறித்த நபர் கொலை செய்துள்ளார்.

பின்னர் நூற்றாண்டு பழமையான தமது ஓய்வு இல்லத்திற்கு நெருப்பு வைத்து, கொலைக்கான ஆதாரங்களையும், தமது மனைவியின் சடலத்தையும் அதில் அழித்துள்ளார். சம்பவம் நடந்த அடுத்த நாளில் போலீஸ் மற்றும் மீட்பு குழுவினர் மேற்கொண்ட தேடலில்  முற்றாக எரிந்த நிலையில் குறித்த பெண்மணியின் சடலம் கைப்பற்றப்பட்டது.

மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், தலையில் பலமாக தாக்கப்பட்டதால் அவர் மரணமடைந்துள்ளது தெரியவந்தது.  திட்டமிட்டே அந்த இல்லத்திற்கு நெருப்பு வைத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் பிரான்சில் தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்து சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here