மனித நேயம் மரிக்கவில்லை

கோலாலம்பூர், ஏப்.18-

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையவிருந்த 200 ரோஹிங்கிய மக்களை அரச மலேசிய விமானப்படை (ஆர்.எம்.ஏ.எஃப்) சி -130 எச் கண்காணிப்பு விமானத்தின் உடனடி நடவடிக்கையால் தடுக்கப்பட்டிருப்பதாக செய்தி கிடத்திருக்கிறது.

மலேசிய கடல் எல்லையில் படகு நுழைந்திருப்பதை கண்டதாக ​​விமானி மேஜர் ஃபைசுல் ஹுசைன் தெரிவித்திருக்கிறார். இவர் சுபாங் விமானத் தளத்திலிருந்து சி -130 ஹெச், ரக விமானத்தில் கடல் எல்லையில் இருந்தபோது நேற்றுக் காலை 10.30 அளவில் லங்காவி நீரில் படகு ஒன்றைக் கண்டாதாக தெரிவித்தார்.

ஆர்.எம்.ஏ.எஃப், தெரிவித்த அறிக்கையில், சுமார் 200 ரோஹிங்கிய மக்களுடன் படகு ஒன்று லங்காவி தீவுக்கு மேற்கே 70 கடல் மைல் தொலைவில் இருப்பதைக் கண்டதாக விமானி ஃபைசுல் தகவல் கொடுத்திருக்கிறார்.

அரச மலேசிய கடற்படை (RMN) கப்பல்களான KD Lekiu , KD Lekir இரண்டையும் தொடர்பு கொண்டதும் அவ்விரு கடல் ரோந்து கப்பல்களும், ரோஹிங்கிய மக்கள் வந்த படகை நோக்கி விரைந்தனர்.

ஆர்.எம்.என் சூப்பர் லிங்க்ஸ் ஹெலிகாப்டரின் உதவியுடன் அவ்விரு கடல் ரோந்து கப்பல்களும் மலேசிய எல்லைக்குள் நுழைந்த அக்கப்பலைத் தடுத்தனர்
இப்படிகில் வந்த மக்கள் கோவிட் -19 தொர்றுடன் வந்திருக்கக் கூடும் என்பதால் நாட்டிற்குள் கொண்டு வருவதற்குமுன் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில், கே.டி. லெக்கியு குழுவினர் முதல் உதவியாக உணவு வழங்கினர்.

நாட்டின் நீதியைக் கடைப்பிடிப்பதுடன் மனித நேயத்திற்கான நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது.

இதுபோன்ற வான்வழி கடல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குரிப்படப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here