கோலாலாம்பூர், ஏப். 18-
சொக்சோ தொடர்பில் , ஏப்ரல் மாத முதல் நாளில் சமர்ப்பிக்கப்பட்ட தொழிலாளர்கள் விண்ணப்பங்கள் முழுயடைந்திருக்கவில்லை என்று சொக்சோ அறிவித்திருக்கிறது.
சில முதலாளிகள் முழுமையற்ற விண்ணப்பங்களை சமர்ப்பித்திருக்கின்றனர், சரியான தகவல் அதில் இடம்பெறவில்லை. ஆவணங்கள் முறையாக நிரப்பப்படவில்லை என்பதை சொக்சோ குறிப்பிட்டிருக்கிறது.
வேலைவாய்ப்பு, காப்பீட்டுத் திட்டத்திற்கு அனுப்பப்பட்ட சில விண்ணப்பங்களில் முதலாளி அல்லது நிறுவனத்தின் வங்கிக்கணக்கு எண் குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பதிலாக முதலாளிகள் தங்கள் தனிப்பட்ட வங்கிக்கணக்கு எண்ணை குறித்திருக்கின்றனர்.
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு கூடல் இடைவெளி ஆணை (எம்.சி.ஓ) முடிந்ததும் முதலாளிகள் ஆன்லைனில் பிரிஹாத்தின், பெர்கெசோ. ஆகியவற்றை விண்ணப்பித்துக்கொள்லாம். மேலும் அருகிலுள்ள சோக்கோ அலுவலகத்தையும் நாடலாம்.
மானிய விண்ணப்பத்திற்கான இறுதி தேதி செப்டம்பர் 15 ஆகும்.
எந்தவொரு விசாரணையும் சமூக பாதுகாப்பு அமைப்பான சொக்சொ perkeso@perkeso.gov.my அல்லது facebook.com/perkeso.official என்ற மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம். தவிர்த்து 03-8091 5100 / 03-4264 5555 / 1-300-22-8000 என்ற எண்களிலும் அழைத்து விவரங்கள் பெறலாம்.
மார்ச் 28 ஆம் நாளில் மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன், ஊதிய மானிய திட்டத்தின் மூலம் பயனர்கள் தங்கள் ஊழியர்களுக்கான உரிமை கோரல்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
வேலைத் திட்டத்தை அமல்படுத்திய பின்னர், மூன்று மாதங்களுக்கு முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்யவோ, சம்பளத்தைப் பிடித்தம் செய்யவோ கூடாது. ஊதியம் இல்லாமல் விடுப்பு எடுக்க கட்டாயப்படுத்தவும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறியிருந்தார்.