கோவிட் – 19 காரணமாக பள்ளி தவணை தடைபட்டபோதிலும் ஆசிரியர்கள் மின்னியல் கற்பித்தல், கூகுள் வகுப்பு, வாட்ஸ்அப் போன்றவற்றின் வாயிலாக தங்கள் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். மாணவர்களும் இப்புதிய வகையான கற்றல் முறையை ஏற்றுக் கொண்டனர்.
மாணவர்களின் அடைவு நிலையை மதிப்பீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் புதிய அணுகுமுறையின் இலக்கு நிறைவேறுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது. இது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்துவிடும். இவ்விவகாரத்தில் பெற்றோர்களின் வருத்தத்தையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளலாகாது. இது சரிசமமற்ற நிலையை உருவாக்குவதோடு ஆரோக்கியமற்ற புள்ளி வழங்குதலுக்கும் வித்திடும் என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் விவரித்தார்.
ஒரு வேளை, புதிய நடைமுறையை பின்பற்ற அரசாங்கம் உறுதியாக இருந்தால், நடப்பு மதிப்பீட்டு முறைக்குப் பதிலாகயூபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 மதிப்பீட்டு சோதனையில் ஒட்டுமொத்தமாக வெளிப்படை மற்றும் சரிசமமான மதிப்பீட்டு முறையை அரசாங்கம் அமல்படுத்தும் என்று கெராக்கான் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
மாரா ஆரம்ப அறிவியல் இளநிலை கல்லூரியில் (எம்ஆர்எஸ்எம்) கல்வியைத் தொடரும் தகுதியை உறுதிப்படுத்துவது போன்று யூபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வு முடிவுகளின் அடிப்படையில்முழு தங்குமிட வசதி கொண்ட பள்ளிகளுக்கு தகுதி பெறுவது முடிவு செய்யப்படுமேயானால், இனம், சமய பேதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அரசாங்கம் எடுக்கும் அனைத்து முடிவுகளும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்கி ஒன்றுபட்ட மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று கெராக்கான் கட்சி பெரிதும் எதிர்பார்ப்பதாக பிரபாகரன் கூறினார்.