கொரோனா தொற்று -19 இல் வெளிநாட்டினர் மீது அரசு கவனம்

பெட்டாலிங் ஜெயா,ஏப்.20 – ஆவணப்படுத்தப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களிடையே கோவிட் -19 பரவுவது நன்கு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சட்டவிரோத செயல்களால் அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது என்று முதலாளிகள் கூறுகின்றனர்.

மலேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் (எம்.இ.எஃப்) நிர்வாக இயக்குநர் டத்தோ ஷம்சுதீன் பர்டன் சட்டவிரோத தொழிலாளர்களிடையே வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது கடினம், ஏனெனில் அவர்கள் எந்த வகையான மருத்துவக் காப்பீட்டிலும் இல்லை.

அவர்கள் ஜலான் மஸ்ஜித் இந்தியா போன்ற நெருக்கடியான இடங்களிலும் வாழ்கின்றவர்களாக இருக்கின்றனர். நாட்டில் 3.3 லட்சம் வரை சட்டவிரோத தொழிலாளர்கள் இருக்கக்கூடும் என்று கணிக்க்ப்பப்பட்டிருப்பதாக ஷம்சுதீன் கூறினார், ஆவணப்படுத்தப்பட்டவர்கள் 2.லட்சமாக இருக்கிறார்கள்.

இருப்பினும், ஒவ்வொரு சட்டபூர்வமான வெளிநாட்டு ஊழியருக்கும் சுமார் 1.5 சட்டவிரோத தொழிலாளர்கள் இருப்பதாகவும் கணக்கிடுகிறார்கள். சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்களிடையே கோவிட் -19 பரவுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் இன்னும் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும், என்று அவர் நேற்று கூறினார்.

வெளிநாட்டு தொழிலாளர்களிடையே கோவிட் -19 நோய்த் தொற்றுகள் இப்போது 600க்கும் அதிகமாக உள்ளன, அல்லது நாட்டில் அவர்களின் தொழிலாளர்களில் 0.3 விழுக்காட்டினர் உள்ளனர்.

ஜலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள சிலாங்கூர் மேன்சன், மலாயன் மேன்ஷன் குடியிருப்புகள், ஜாலான் முன்ஷி அப்துல்லாவில் உள்ள மெனாரா சிட்டி ஒன் கொண்டோமினியம் ஆகியவற்றில் தங்கியிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டினர் என்று கூறப்படுகிறது.

மூன்று கட்டடங்களில் 120 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான சோதனையை பெருமளவில் அமைச்சகம் தொடங்கும் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

எம்.சி.ஓவின் மூன்றாம் கட்டத்தின் போது செயல்பட அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டினர் முதலில் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஷம்சுதீன் கூறினார்.

ஒருமுறை சுகாதாரத்திற்கான தெளிவு வழங்கப்பட்டால் அப்போதுதான் அவர்கள் வேலைக்கான உறுதியை வழங்க முடியும். பதிவுசெய்யப்பட்ட, சமூக பாதுகாப்பு அமைப்பில் (சொக்ஸோ) பங்களிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இதர்குத் தகுதியுடையவர்கள்.

இதுவரை பதிவு செய்யப்படாத நிறுவனங்களால் 700,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்கின்றனர். அவர்களும் சோதனைக்கு உடபடுத்தப்படவேண்டுமானால் செலவை சோக்சோ ஏற்க வேண்டும். இதர்குமுன் அந்நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு சோக்சோவில் பதிவு பெறவேண்டும் என்று ஷம்சுதீன் கூறினார்.

ஆவணப்படுத்தப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருப்பதால் மருத்துவ சிகிச்சையில் சிக்கல்களை எதிர்கொள்ள மாட்டார்கள் .
வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆலோசனைக் கட்டணங்களை வழங்க முதலாளிகள் பொறுப்பேற்கிறார்கள்.

இதற்கிடையில், மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் (யு.என்.எச்.சி.ஆர்) அகதிகளிடையே கோவிட் -19 நோய்த் தொற்றுகளை நிர்வகிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

இங்குள்ள அதன் பொது சுகாதார அதிகாரி டாக்டர் சுசீலா பாலசுந்தரம், கொரோனா -19 தொடங்கியதிலிருந்தே அகதிகள் பட்டியலில் புகலிடம் கோரும் சமூகங்கள் அரசாங்கத்தின் தேசியத்தில் சேர்க்கப்படுவதை உறுதிசெய்கிறது என்று தெரிவித்தார். மலேசியாவில் யு.என்.எச்.சி.ஆரில் சுமார் 180,000 அகதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here