நாடு திரும்பிய மாணவர்களுக்குத் தொற்று

Health ministry

பெட்டாலிங் ஜெயா, ஏப். 20 –
இந்தோனேசியாவின் சிவப்பு மண்டலப் பகுதியிலிருந்து திரும்பிய சில மாணவர்களிடம் புதிய கோவிட் -19 தொற்று இருப்பது கண்டுபிட்டிக்கப்பட்டிருக்கிறது என்று டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 16 ஆம் தேதி டெஸ்டோரோவிலிருந்து திரும்பிய 43 மாணவர்களுக்கு இந்த தொற்று இருப்பது அறியப்பட்டுள்ளது.  இந்த ஒட்டுமொத்த எண்ணிக்கையிலிருந்து, 34 பேர் மெலகாவிலும் ஒன்பது பேர் கோலாலம்பூர் புத்ராஜெயாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து திரும்பும் அனைத்து மலேசியர்களையும் தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியான பாதையில் கையாளப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. வெளியிலிருந்து வந்த அனைத்து வழக்குகளும் உள்நாட்டில் மலேசியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை இது உறுதி செய்யும் என்று சுகாதார இயக்குநர் நேற்று தனது தினசரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்று நண்பகல் வரை, மேலும் 84 புதியவை பதிவாகியுள்ளன, இவற்றோடு 5,389 பதிவுகள் உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 46 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்கள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

மேலும் ஓர் இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது, இப்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர். தனிமைப் படுத்தப்பட்டவர்களில் 95 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர், மொத்தம் மீட்கப்பட்ட எண்ணிக்கை 3,197 ஆக உள்ளது என்றார் அவர்.

கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ரெம்டெசிவிர் மருந்தின் செயல்திறன், பாதுகாப்பு குறித்து சுகாதார அமைச்சகம் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும். உலக சுகாதார அமைப்பின் கூட்டுச் சோதனையில் பங்கேற்கும் ஒன்பது மருத்துவமனைகள், கோவிட் -19 நோயாளிகளிடமிருந்து பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்யத் தயாராக உள்ளன.

நேர்மறையான, ஆனால் எந்த அறிகுறிகளையும் காட்டாத நோயாளிகள் சோதனைக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள்ரிதர்குப் பயன்படும் மருந்துகளின் மதிப்பீடு மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். .

பாதுகாப்பு, தரம் , கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் மருந்தின் ஆரம்ப செயல்திறன், மருத்துவ பரிசோதனையின் முக்கியத்துவம் காரணமாக மருத்துவ ஆராய்ச்சி நெறிமுறைகள், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆகியவை ரெம்டெசிவிர் மருந்துக்கான மாதிப்பீடாக இருக்கும் இச்சோதனை இறக்குமதி உரிமத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக அமையும் என்றார் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here