கோத்தா கினபாலு, ஏப். 21 –
ஓர் அவசர அறுவை சிகிச்சையில், கோவிட் -19 தொற்று பெண்ணைக் கையாண்ட அனைத்து ஊழியர்களையும் கோத்தா கினபாலு கிளினிக்கள்ஸ் மருத்துவமனை தனிமைப்படுத்தியிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21 இல்) சோதனை முடிவுகள் ஏப்ரல் 17 ஆம் தேதி கிடைத்த உடனேயே குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு அப்பெண் மாற்றப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சுமார் 55 வயது மலேசியப் பெண்ணான அவர், அவசர அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்.
நோயாளியின் அறுவை சிகிச்சையின் அவசரம் காரணமாக, கோவிட் -19 சோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கையில், நோயாளியைச் சந்தேகத்திற்கிடமான வழக்காகக் கருதி தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்தது.
இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளும் கிருமிநீக்கம் செய்வதற்காக மூடப்பட்டுள்ளதாகவும், நோயாளியுடன் தொடர்பு கொண்ட அனைத்து ஊழியர்களும் கண்டுபிடிக்கப்பட்டு, கோவிட் -19 தொற்றின் காரணத்தால் பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அந்த மருத்துவமனையில் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படவில்லை.
னிமைப்படுத்தப் பட்டவர்களும், நோயாளிகளும் பாதுகாப்பான சூழலில் இருக்கின்றனர். கிளினிக்கள்ஸ் மருத்துவமனை தற்போதைய பராமரிப்புத் திட்டங்களைத் தொடரலாம் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.