வலியில் அல்ல, வழியில் பிறந்தது குழந்தை

தவாவ், ஏப் 21-

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் பிரசவவலி ஏற்பட்ட அனுபவம் சிலருக்கு உண்டு. அந்த அனுபவத்தில் சிக்கிய ஒரு பெண் தனது காரில் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

நோஸி அப்துல் ஆசா என்ர கர்ப்பிணிப்பெண் தனது தந்தை அப்துல் ஆசா மொஹமட் சல்லேஹ் (65) என்பவரின் உதவியோடு மூத்த மகள் ஆயிஷா மைசெலாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு அவசரமாகப் புறப்பட்டார்.

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் செல்ல வேன்டியதை அவர் உணர்ந்திருந்தாலும் பிரசவ வலியில் இருந்தார். இரண்டு சாலைத் தடைகளில் அவரகல் சென்ற வாகனம் நகர மறுத்தது.

சனிக்கிழமை காலை நேரம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டனர்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஜாலான் டிக்குவைப் பயன்படுத்தி, மாற்று வழியை முயற்சித்தனர் ஆனால், ஜாலான் குஹாராவில் ஒரு சாலைத் தடையில் மற்றொரு நெரிசலில் சிக்கினர்.

அதிர்ஷ்டவசமாக, ஒரு ஆம்புலன்ஸ் கடந்து சென்றது, ஆயிஷா தனது தாயின் நிலையை அவர்களுக்குத் தெரிவித்தார்.

அவர்கள் தங்கள் வாகனத்தைப் பின்தொடருமாறு அறிவுறுத்தினர், என்று அப்துல் ஆஷா கூறினார்.

வழியிலேயே 37 வயதான நோஸி, 3.4 கிலோ எடையில் அழகிய, ஆரோக்கிய குழந்தையை ஈன்றெடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here