மலாக்கா, ஏப்.21-
விரைவில் எரியும் தன்மை கொண்ட ‘ரெசின்’ ரசாயனம் சாலையில் கொட்டியதால் சுங்கை ஊடாங் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அலோர்காஜா தீயணைப்பு நிலையத்திலிருந்து புறப்பட்ட மீட்புப் படையினர் கடுமையாகப் போராடி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நேற்று மாலை சுங்கை ஊடாங் சாலையில் ரசாயனம் ஏற்றி வந்த லோரி கவிழ்ந்தது.
விரைவில் எரியும் தன்மை கொண்ட ரசாயனம் என்பதால் சுற்று வட்டார மக்கள் மத்தியில் பீதி பற்றிக் கொண்டது.
தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி ரசாயனம் மீது நீரைப் பாய்ச்சி அருகில் உள்ள ஆயேர் சாலாக் ஆற்றை நோக்கி திசை திருப்பினர்.