கடத்தல் சிகரெட்டுள் கைப்பற்றப்பட்டன கார், ரொக்கம் பறிமுதல்

கோட்டா கினபாலு , ஏப் 22-

இங்குள்ள ஜாலான் உலு புட்டாத்தான் வட்டாரதில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது இரண்டு பாக்கிஸ்தான் ஆண்கள் கைது செய்யப்பட்டனர். சபா துணை போலீஸ் கமிஷனர் டத்தோ மஸ்லி மஸ்லான் பிற்பகல் 3.30மணியளவில் மேற்கொண்ட நடவடிக்கையில் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறையைச் சேர்ந்த ஒரு குழு ஒரு பெரோடுவா பெஸ்ஸா காரை தடுத்து சோதனையிட்டது.

இரு பாகிஸ்தானிய ஆண்கள் காரில் இருந்தனர் என்பது தெரியவந்தது, அவர்கள் இயக்க கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) அமல்படுத்தியபோது தங்கள் நோக்கத்தை தெரிவிக்க தவறிவிட்டனர்.

மேலதிக விசாரணையில் சிகரெட்டுகள் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது . சந்தேக நபர்கள் ராயல் மலேசிய சுங்கத் துறையிடமிருந்து எந்தவொரு கட்டணமம் செலுத்திய ஆதாரத்தையும் காட்டவில்லை என தெரியவந்தது.

மேலும் அவர்கள் தங்களை விடுவிப்பதற்காக 7,000 வெள்ளி லஞ்சம் கொடுக்க முயன்றனர் என்று கண்டறியப்பட்டது என்று பெனாம்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் (ஐபிடி) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நடவடிக்கையில் 37,409 வெள்ளி ரொக்கம் , 109,409 மதிப்புள்ள கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு 1967 சுங்கச் சட்டத்தின் பிரிவு 135 (1) (ஈ) இன் கீழ் விசாரிக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்.ஏ.சி.சி) பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here