தோக்கியோ, ஏப்.22-
இத்தாலி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான கொஸ்தா அட்லாண்டிகா உல்லாசக் கப்பலில் உள்ள 33 சிப்பந்திகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிப்பந்திகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாகாசாக்கி துறைமுகத்தில் இக்கப்பல் கடந்த இரண்டு மாதமாக நங்கூரமிட்டிருந்தது.
பயணிகளை ஏற்றாத நிலையில் கப்பலை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவரிடமிருந்து தொற்று பரவியிருப்பதாக ஜப்பான் டைம்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.