பலகாரப் படலம் தொடங்கியது முட்டைகளின் தேவை அதிகரிப்பு

கோலாலம்பூர், ஏப்.22-
ஊரடங்கு காலத்தில் குடும்ப மாதர்கள் சமைப்பதற்கு அதிகமாக பயன்படுத்துவதால் முட்டைகளின் தேவை அதிகரித்து வருகிறது.

நோன்புப் பெருநாள் நெருங்குவதாலும் பலகாரங்களை தயாரிக்கும் படலம் ஆரம்பமாகி விட்டது.

இதன் காரணமாகவும் முட்டைகளின் தேவை அதிகரித்துள்ளது.

சாமானிய மக்களின் உணவாகத் திகழ்வதால் முட்டைப் பற்றாக்குறை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

99 மற்றும் 7/11 கடைகளில் விற்பனைக்கான முட்டைகள் பற்றாக்குறை இருந்து வருகிறது.

கிளந்தான் மாநிலத்தில் முட்டைகள் பற்றாக்குறை ஏற்படாது என பயனீட்டாளர் அமைச்சின் கிளந்தான் மாநில இயக்குனர் அட்னான் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதர மாநிலங்களில் முட்டை பற்றாக்குறை ஏற்படக் கூடும் என்றே தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here