அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,176 பேர் பலி

நியூயார்க், ஏப்ரல் 24-

உலக நாடுகளில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் அந்நாட்டில் நேற்று 1,738 பேர் பலியாகி இருந்தனர்.  இதனால் பலி எண்ணிக்கை 46 அயிரத்து 583 ஆக உயர்ந்தது.

இதேபோன்று 8 லட்சத்து 34 ஆயிரத்து 858 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  இது ஸ்பெயின் நாட்டை விட 4 மடங்கு  அதிகம்.  ஸ்பெயினில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 389 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை கொண்டுள்ளது.  இந்த நாடுகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலி எண்ணிக்கையை கொண்டுள்ளன.

இதேபோன்று உலக அளவில் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்.

இந்த எண்ணிக்கை இன்று உயர்ந்து உலக அளவில் 27 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 1 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர்.  இதுவரை 7 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,176 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தினை நெருங்கி வருகிறது.  இது மற்ற நாடுகளை விட எண்ணிக்கையில் அதிகம் ஆகும்.  பாதிப்பு எண்ணிக்கையும் 8 லட்சத்து 80 ஆயிரத்து 204 ஆக உயர்ந்து உள்ளது.  85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here